மின்னல் தாக்கியதில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு
ருவன்வெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ருவன்வெல்ல மாப்பிட்டிகம பிரதேசத்தில் களனி ஆற்றில் குளித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்ற குழுவினர் நேற்று சனிக்கிழமை மாலை இந்த அனர்த்தத்தை சந்தித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்