மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பு – வாழைச்சேனை, ஈச்சையடி பகுதியிலுள்ள பண்ணையில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

குடும்பிமலை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரும் அவரது மருமகனான புலிபாய்ந்த கல்லைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

முன்னாள் பிரதி அமைச்சருக்கு சொந்தமான குறித்த பண்ணையை வாழைச்சேனையை சேர்ந்த நபர் ஒருவர் குத்தகை அடிப்படையில் நிர்வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.