மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல்

மின்சார இணைப்பை துண்டிக்கச் சென்ற இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கம்பஹாவில் நேற்று நெவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கம்பஹாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மின்சார இணைப்பை துண்டிக்க சென்ற போது இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த குறித்த இரண்டு ஊழியர்களும் கம்பஹா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில்இ தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன