மாணிக்கற்களை விற்க முயற்சித்த பிக்கு உட்பட இருவர் கைது

மாத்தளையில் இரண்டு நீல நிற மாணிக்க கற்களை விற்பனை செய்ய முயற்சித்த பிக்கு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிவேரிய பிரதேசத்தில் வசித்து வரும் பிக்கு மற்றும் 72 வயதுடைய பிரபல அரசியல் கட்சியொன்றின் உள்ளூர் அரசியல்வாதியின் தந்தை என்போரே இவ்வாறு கைது செய்யப்பட்டடுள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பிலான மேலதிக விபரங்களை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.