மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

நுவரெலியா – நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வென்சர் தோட்டப் பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் நோர்வூட் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

நோர்வூட் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடம் இருந்து அகழ்வு பணிக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க