மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பான விசேட அறிவித்தல்

கல்வி அமைச்சு ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பரீட்சைகள் உட்பட அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக மாத்திரம் மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைக்க அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

பல மாகாணங்களின் தவணைப் பரீட்சைகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் சில தரப் பரீட்சைகள் மாத்திரமே நடைபெறவுள்ளமையினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாடசாலைகளின் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் அதே காலப்பகுதியில் பாடசாலைகளுக்குச் சென்று எதிர்வரும் பரீட்சைகளுக்கான தயார்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.