மாணவர்களுக்கு இடையில் மோதல் : 17 பேர் காயம்

விக்டோரியா பகுதியில் இன்று புதன்கிழமை பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 17 மாணவர்கள் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சி ஒன்றிற்காக ரந்தெம்பே பிரதேசத்தில் உள்ள தேசிய பயிற்சி மையத்திற்கு கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் இருந்து பாடசாலை மாணவர்கள் சென்றுள்ளனர்.

இதன்போது மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த மாணவர்களை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் கடுமையான எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.