மாட்டு கொட்டகையில் துப்பாக்கிசூடு : ஒருவர் படுகாயம்

அம்பாறை – மஹொய்யா பிரதேசத்தில் உள்ள கால்நடை கொட்டகைக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் காயமடைந்த ஒருவர் மஹாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாடுகளின் அலறல் சத்தம் கேட்பதாக அயலவர் வழங்கிய தகவலின் பிரகாரம் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரும்,  மாட்டு கொட்டகையின் உரிமையாளரும் நேற்று வியாழக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு, மாட்டுக்கொட்டகைக்கு அருகில் உள்ள பாறையில் இருந்த நான்கு பேர் தப்பி ஓட முயன்றபோது,  ​​இருவர் பிடிபட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது, ​​துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹாஓயா – தம்பதெனிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.