மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும்

வளிமண்டலத்தின் தாழ்வான பகுதி தொடர்ந்து கொந்தளிப்புடன் காணப்படுவதால் நாட்டில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில், சில இடங்களில் 75 மி.மீ வரை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது