மலையகத்தில் சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு
-நுவரெலியா நிருபர்-
மலையக நகரங்களில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை, அக்கரபத்தனை உள்ளிட்ட பல சதொச விற்பனை நிலையங்களில் அரசி, மா, சீனி, பருப்பு உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சதொச நிலையங்களுக்கு செல்லும் பெரும்பாலான மக்கள் ஏமாற்றத்துடன் திருப்புவதாக தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை வானளவு உயர்ந்துள்ளது.
இதனால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நியாயமான விலையில் சதொச நிலையங்களில் கிடைப்பதனால் இந்நிலையங்களை நோக்கி தூர பிரதேசங்களிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வருவதாகவும் இந்நிலையங்களில் போதியளவு பொருட்கள் இல்லாததன் காரணமாக மக்கள் ஏமாற்றத்துடன் செல்வதாகவும் தெரிவிக்கின்றனர்.