மலசலகூட குழியில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்பு

பாணந்துறை சுற்றுலா விடுதியொன்றின் மலசலகூட குழியில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பாணந்துறை மேலதிக நீதவான் லஹிரு என் சில்வா முன்னிலையில் குழியைத் திறந்து பார்த்த போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில்  40 மற்றும் 45 வயதுடைய பிலியந்தலை மற்றும் பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த ஹோட்டல் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய வீரகெட்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஹோட்டல் முகாமையாளர் இன்று காலை ஹோட்டலில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.