மருந்து கொள்வனவுக்காக உலக வங்கியிடமிருந்து 10 மில்லியன் டொலர்

மருந்து கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து 10 மில்லியன் டொலர் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், நிதியுதவி அல்லது மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி உலக சுகாதார அமைப்பு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் சுகாதார அமைச்சு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

அரச வைத்தியசாலைகளில் சில மருந்துகளுக்கும் உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு காணப்படுவதாகவும், அதனை சரியாக நிர்வகித்து தொடர்ச்சியாக மருந்துகளை வழங்குவதை உறுதிப்படுத்துகின்ற திட்டமொன்றை தயாரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.