மருந்து இறக்குமதிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் உதவி

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இணங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த உதவியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் ஒப்புக்கொண்டுள்ளது.

இலங்கையில் மருந்து விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இந்த உதவிக்கான கோரிக்கையை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.