மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் மேலுமொரு சிறுவன் உயிரிழப்பு

கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மற்றுமொரு சிறுவன், இன்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கம்பளை கஹட்டபிட்டிய பகுதியைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த 5 வயதுடைய சிறுவன் ஒருவர் சம்பவ தினத்தன்று உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், குறித்த இரண்டு சிறுவர்களில், கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவரே இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.