மரக்கிளை முறிந்து விழுந்து கோவில் சேதம்

-நுவரெலியா நிருபர்-

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மடக்கும்புர புதுகாடு பிரிவில் ஆலமர கிளையொன்று முறிந்து அருகிலிருந்த ஆலயத்தின் மீது விழுந்ததில் ஆலயம் சேதமாகியுள்ளது.

திங்கட்கிழமை மதியம் 12.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிக காற்றினால் குறித்த மரக்கிளை முறிந்து விழுந்துள்ளது.

தோட்ட நிர்வாகத்திற்கு குறித்த சம்பவம் தொடர்பில் அறிவித்ததற்கு இணங்க மரக்கிளையை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.