மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

நாட்டில் கடந்த சில வாரங்களாக மரக்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில், கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் நேற்று திங்கட்கிழமை மரக்கறிகளின் விலையில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதன்படி, 1 கிலோகிராம் கரட்டின் விலை 690 ரூபாயாகவும், 1 கிலோகிராம் வெண்டைக்காய் 490 ரூபாயாகவும், கோவாவின் விலை 390 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் 1 கிலோகிராம் போஞ்சி 600 ரூபாயாகவும்,  1 கிலோகிராம் லீக்ஸ் 490 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது