
மன அழுத்தத்தால் தவறான முடிவெடுத்த சிறுமி
யாழ் கல்வியங்காடு சட்டநாதர் கோவில் அருகே உள்ள வீட்டில் தங்கி இருந்து வீட்டுப் பணி புரிந்து வந்த சிறுமி நேற்று ஞாயிற்றுக்கிழமை துக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை முதலி கோவிலடியைச் சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா (வயது – 17) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி வீட்டு பணிபுரிந்த குடும்பத்தினர் நிகழ்வொன்றுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கையில் சிறுமி தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டுள்ளார்.
மேலும், சிறுமியை பார்க்க யாரும் வரக்கூடாது என்று தெரிவித்த வீட்டு உரிமையாளர் மாதத்தில் ஒரு முறை மாத்திரம் கதைக்க முடியுமென தெரிவித்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுவதுடன் இவ் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.