
மன்னார் மாவட்டச் செயலகம் ஏற்பாடு செய்த சூரியப்பொங்கல் மற்றும் உழவர் கௌரவிப்பு நிகழ்வு
-மன்னார் நிருபர்-
மன்னார் மாவட்டச் செயலகம் ஏற்பாடு செய்த சூரியப்பொங்கலும், உழவர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம் பெற்றது.
இதன் போது பொங்கல் பொங்கியதுடன் அதனை தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம் பெற்றதோடு தெரிவு செய்யப்பட்ட உழவர்கள் மாவட்ட அரசாங்க அதிபரினால் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர்.பரந்தாமன், மாவட்ட செயலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்