மதுபானசாலையில் திருட்டு

-யாழ் நிருபர்-

யாழ் கல்வியங்காடு மதுபானசாலையில் இரண்டு பெறுமதிமிக்க துவிச்சக்கர வண்டிகள் திருட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு மதுபானசாலையில் நேற்றிரவு இரண்டு பெறுமதிமிக்க துவிச்சக்கர வண்டிகள் இனம் தெரியாத திருட்டு கும்பலால் திருடப்பட்டுள்ளது.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவது,

யாழ்ப்பாணம் கல்வியங்காடு கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு குமரன் மதுபானசாலையில் நேற்றிரவு மின்சாரம் தடை பட்டிருந்த நேரத்தில் மதுபானம் வாங்க சென்ற இருவருடைய  பெறுமதிமிக்க துவிசக்கர வண்டிகள் இனம் தெரியாத திருட்டு கும்பலால் திருடப்பட்டுள்ளது.

யாழில் மேற்கொள்ளப்படும் மின் தடையை சாதகமாக பயன்படுத்தி குறித்த திருட்டை இனம் தெரியாத கும்பல் மேற்கொண்டுள்ளது.