மட்/காக்காச்சிவட்டை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் சாதனையாளர் பாராட்டு விழா

-வெல்லாவெளி நிருபர்-

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயப்பிரிவிற்குட்பட்ட காக்காச்சிவட்டை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் காக்கிச்சிவட்டை அன்னையின் கரங்கள் அமைப்பினால் சாதனையாளர் பாராட்டு விழா இடம்பெற்றது.

இந்த நிகழ்வு இன்று வியாழக்கிழமை பி.ப 12.30 மணியளவில் , வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் வித்தியாலய அதிபர் வே. குணாளன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக உதவிக்கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) ரி.உதயகுமார் , கோட்டக்கல்வி பணிப்பாளர் (போரதீவுப்பற்று ) ரி. அருள்ராசா மற்றும் ஆலயக்குருமார் , காக்காச்சிவட்டை கிராம பொது நிர்வாக அமைப்புகளின் பிரிதிநிதிகள் , ஆசிரியர்கள், மாணவர்கள் ,கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது தலைமை உரை அன்னையின் கரங்கள் அமைப்பின் பிரதிநிதி த.தியாகராசாவால்  இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து வரவேற்பு நடனம், தலைமையுரை, அதிதிகள் உரை , கலைநிகழ்ச்சிகள் மற்றும் தரம் 5 மாணவர்களில் புலமை பரிசில் பரிட்சை சித்தியடைந்தோர் , க.பொ.சாதாரண தரம் மற்றும் உயர் தரம் சித்தியடைந்தோர் , பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டோர் , பட்டப்படிப்பு நிறைவுசெய்தோர் மற்றும் கல்வியற்கல்விக்கு தெரிவுசெய்யப்பட்டோர் போன்றவர்களுக்கு அன்னையின் கரங்கள் அமைப்பினால் பதக்கங்கள் , வாழ்த்து மடல்கள் போன்றன வழங்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கான பூரண அனுசரணையினை காக்காச்சிவட்டை அன்னையின் கரங்கள் அமைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.