மட்டு.வாகரையில் அறநெறி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பித்து வைப்பு
-வாழைச்சேனை நிருபர்-
மட்டக்களப்பு வாகரையில் பல்வேறு இடங்களில் இயங்கா நிலையில் இருந்த அறநெறி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
பிரதேச ஆலய நிர்வாகத்தினரால் விடுத்த வேண்டுகோளினை அடுத்து வடக்கு கிழக்கு முன்னேற்ற கழகத்தின் அனுசரணையுடன் இச் செயற்பாடு முன்னெடுகப்பட்டது.
புச்சாக்கேணி திருச் செந்தூர் முருகன் அறநெறிபாடசாலை மற்றும் பால்சேனை பெரியசாமி அறநெறிப்பாடசாலை என்பன வைபவ ரீதியாக சர்வமத குருமார்களின் ஆசிர்வாதத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டது.
சிவகுரு ஆதின முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரேழுச்சி இயக்க இணைப்பாளரும் ஆகிய தவத்திரு வேலன் சுவாமி, தென்கயிலை ஆதின முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகள், தென்கயிலை ஆதின திருமூலர் தம்பிரான் சுவாமி, அருட்தந்தை கே.ஜெகதாஸ் அருட்தந்தை எஸ்.பிரின்சன், வடக்கு கிழக்கு முன்னேற்ற கழகத் தலைவர் கு.வி.லவக்குமார் மற்றும் வடக்கு கிழக்கு வாகரை கிளைத் தலைவர் பாலேந்திரன், ஆகியோர்கள் அதிகளாக கலந்து கொண்டனர்.