மட்டு.வம்மிவட்டவான் விநாயகர் ஆலய சங்காபிஷேகம்

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு வம்மிவட்டவான் கோலத்தலாமடு திருவருள்மிகு ஆலயடி விநாயகர் ஆலய சங்காபிஷேகம் இன்று வியாழக்கிழமை பக்த அடியார்கள் புடைசூழ, வேதபாராயணங்கள் முழங்க நிகழ்த்தப்பட்டது.

இதனை முன்னிட்டு காலை வேளையில் பால்சேனை பால விநாயகர் ஆலயத்திலிருந்து பெண்கள் பாற்குடம் ஏந்தி ஊர் வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தனர்.

இதன்போது பெண்களால் எடுத்து வரப்பட்ட பால் ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இச் சங்காபிஷேகப் பெருவிழாவினைக் காண மட்டக்களப்பு மாவட்டத்தின் நாலாபக்கமும் இருந்து பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்ததைக் காண முடிந்தது.

இந்நிலையில் இவ்வாலய உற்சவம் இன்று ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.