மட்டு. போதனா வைத்தியசாலைக்கு ஐ.ஓ.சி ஊடாக டீசல் விநியோகம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய தேவைக்கான சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு ஐ.ஓ.சி ஊடா க டீசல் விநியோகிக்கப்பட்டதாக, மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரும் மட்டக்களப்பு .ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரும் சமூக சேவையாளருமான முத்துக்குமார் செல்வராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சுகாதார மருத்துவ பாதுகாப்பு நலன் கருதி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய தேவைகளுக்கான சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நோயாளர் காவி வண்டிகள் மற்றும் மருந்து பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் போன்ற அத்தியாவசிய வாகனங்களுக்கு எரிபொருளை வழங்கியதுடன், இதன்போது எரிபொருளை பெற்றுக்கொள்ள வீதிகளில் காத்திருந்த வாகன சாரதிகளும் தமது ஒத்துழைப்புக்களை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.