மட்டு. தேற்றாத்தீவில் சடலம் மீட்பு – படங்கள் இணைப்பு

களுவாஞ்சிக்குடி நிருபர் -ச.சோபிதன்-

மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் வயோதிபர் ஒருவருடைய சடலம் இன்று புதன்கிழமை நண்பகல் அளவில் மீட்கப்பட்டுள்ளதாக, களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தோற்றாத்தீவு-1  புதுக்குடியிருப்பு பகுதி வீரபத்திர ஆலைய வீதியைச் சேர்ந்த ஆறுமுகம் கிருஸ்ணபிள்ளை (வயது-84) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் மட்டக்களப்பு  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.