மட்டு.சந்திவெளியில் விபத்து : இளம் குடும்பஸ்த்தர் பலி

-வாழைச்சேனை நிருபர்-

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பண்ணை வீதியில் இன்று  பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

மாவடிவேம்பு பகுதியை சேர்ந்த  சிவலிங்கம் பவாநந்தகுமார் (வயது32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் வந்தவரை மாவடிவேம்பு – பண்ணை வீதி வழியாக வீதி அபிவிருத்தி வேலைக்காக கற்கல் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து தொடர்பாக பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து கலகத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அமைதியின்மை ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு சந்திவெளி பொலிஸார் வருகை தந்து விசாரனைகளை மேற்கொண்டிருந்தனர்.

சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய வாகனம் சந்திவெளிப் பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.