
மட்டக்களப்பு-வவுணதீவு பிரதேச கிராமங்களுக்குள் ஊடுருவிய யானைகள்
-வவுணதீவு திருபர்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை கற்பானைக்குளம் போன்ற கிராமங்களுக்குள் இன்று புதன்கிழமை அதிகாலை சில காட்டு யானைகள் ஊடுருவி அங்குள்ள இரண்டு விவசாயிகளின் தென்னை மரங்களையும், பயிர்களையும் அழித்து துவசம் செய்துள்ளது.
யானை பாதுகாப்பு மின்சார வேலிகள் இருந்தும், அவ் வேலிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் ஊடுருவி, தமது பயிர்களையும் வீடுகளையும் தாக்கி சேதப்படுத்தி வருவதாகவும், இப் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தனர்.
இதனை கவனத்தில் எடுத்து யானைகளிடமிருந்து எமக்கு பாதுகாப்பு வழங்குமாறு இம் மக்கள் அரசாங்க அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.