மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் கட்டணம் செலுத்தி வாழும் முதியோர் இல்லம் இன்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்லடியில் இன்று காலை 9.30 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் சாரங்பாணி அருள்மொழி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஆன்மீக அதிதியாக சுவாமி ஸ்ரீமத் நீலமாதவானந்தாஜீ மகராஜ் கலந்து கொண்டார்
முதன்மை விருந்தினராக ஓய்வுநிலை மேலதிக அரசாங்க அதிபர் த.அருணகிரிநாதர், சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்ல முதியோர் ஞா.அருளம்மா, சிறப்பு விருந்தினர்களாக மன்முணை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன், சமூகசேவை திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் கி.இளங்குமுதன், உதவி மாவட்ட செயலாளர் கு.பிரணவன், அழைப்பு விருந்தினர்களாக வைத்திய கலாநிதி பொன் அநுர மற்றும் திருமதி சாமினி அநுர, ஓய்வுநிலை அதிபர் திருமதி இராஜகுமாரி கனகசிங்கம். தொழில்நுட்ப உத்தியோகத்தர் பா.நந்தசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்