மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

மட்டக்களப்பில் நேற்றைய தினம் வியாழக்கிழமை தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

மட்டு நகரில் அமைந்துள்ள கோல்டன் ரிவைர் விடுதியில் நேற்று மாலை 6 மணியளவில் இந்நிகழ்வு ஆரம்பமானது.

இதன் போது கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்க நலிவடைந்திருக்கும் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு தெற்கில் உள்ள மக்கள் மாத்திரம் அன்றி வடக்கு கிழக்கு மக்களும் கை கோர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸா நாயக்க, தேசிய மக்கள் சக்தியின் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்