
மட்டக்களப்பில் தங்களுக்கான வீதியை தாங்களே அமைக்கும் மக்கள்
மட்டக்களப்பு காஞ்சிரன்குடா பெரியகாலபோட்டமடு, கிழல்கண்டம் பகுதியில் நீண்டகாலமாக சரியான முறையில் வீதி இன்மையினால் மக்கள் பல்வேறு அளெகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது குறித்த பகுதியில் வயல்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் தங்களுடைய அமைப்பு நிதியை பயன்படுத்தி இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் வீதி அமைத்து வருகின்றனர்.
மண்டபத்தடி கமநலசேவை நிலையத்திற்கு உள்பட்ட குறித்த வயலசெய்கை பிரதேசத்தில் விவசாயிகள் தங்களுக்கான வீதியை தாங்களே அமைப்பதாக எமது செய்தியாளரிடம் தெரிவித்திருந்தனர்.