மட்டக்களப்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் நினைவு தினம் இன்று புதன் கிழமை காலை 10.30 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் மலர் தூவி விளக்கேற்றி அனுஷ்டிக்கப்பட்டதுடன் சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.

இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் உட்பட மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், எனப்பலர் கலந்து கொண்டனர்.