மட்டக்களப்பில் சித்திர குப்த விரத நிகழ்வுகள்

-வாழைச்சேனை நிருபர்-

சித்திர குப்த விரதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள பல்வேறு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

அந்த வகையில் பேத்தாழை வாழைச்சேனை ஸ்ரீ வீரையடி ஆலயத்திலும் ஆலய குரு சிவஸ்ரீ எம்.சண்முகம் குருக்கள் தலைமையில் பூஜை நிகழ்வுகள் நடைபெற்றன.

விநாயகருக்கு அபிஷேகமும் சித்திர குப்தருக்கு விசேட அபிஷேகம் பூஜையும், அர்ச்சனை வழிபாடும் சித்திர குப்த நாயனார் கதையும் பாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாரம்பரிய சித்திரை கஞ்சி வைத்து அடியார்களுக்கு வழங்கப்பட்டது.

இன்று சித்திரா பௌர்ணமி தினமாகும் சித்திரை மாத பௌர்ணமி நாளில் சைவர்கள் கொண்டாடும் விழாவாகும்.

இந்த விழாவை எமலோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள்.

அவர் தங்களின் பாவக் கணக்குகளை குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்ற நம்பிக்கையில் சைவர்கள் இவ் விரத்தினை கடைப்பிடிக்கின்றனர்.

குறிப்பாக தாயை இழந்தவர்கள் இவ் விரத்தினை கடைப்பிடிப்பதன் மூலம் இம்மைக்கு பழி நீங்கி மறுமைக்கு பாவ விமோசனம் கிடைப்பதால் நன்மை உண்டாகும் என்ற நம்பிகையும் உண்டு.