மட்டக்களப்பில் கடல் உள்வாங்கியுள்ளதா? சுனாமி எச்சரிக்கையா?
மட்டக்களப்பு கல்லடி நாவலடி உள்ளிட்ட சில பகுதிகளில் கடல் உள்வாங்கியுள்ளதாகவும் சுனாமிக்கான அறிகுறி தென்படுவதாக தெரிவித்தும் தகவல் பரப்பப்பட்டதையடுத்து பரபரப்பான நிலை உருவாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் சுனாமி அனர்த்தம் ஒன்று உருவாகும் பட்சத்தில் மக்களுக்கு அது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக உடனடியாக அறிவிக்கப்படும் என்பதனை மிகவும் பொறுப்புடன் அறியத்தருகின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்