மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திய 28 வயதுடைய நபர் கைது

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 28 வயதுடைய நபர் ஒருவர் கம்பளை எத்கல பிரதேசத்தில் வைத்து, இன்று சனிக்கிழமை  கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு வடக்கு குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு, மோதரை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.

அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கொழும்பு வடக்கு குற்றவியல் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.