போதை மாத்திரைகள் அடங்கிய 671 பொதிகளுடன் ஒருவர் கைது

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா கலந்த மதன மோதகம் போதை மாத்திரைகள் அடங்கிய 671 பொதிகளுடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

25 வயதுடைய இளைஞரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிங்குராங்கொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா கலந்த மதன மோதகம் போதை மாத்திரை அடங்கிய 671 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.