போதை மருந்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது

-யாழ் நிருபர்-

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரந்தனை தெற்கு பகுதியில், ஊசி மூலம் ஏற்றப்படும் போதை மருந்தை உடைமையில் வைத்திருந்த 47 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து இக் கைது நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

குறித்த போதை மருந்து எங்கிருந்து கிடைத்தது என்ற விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.