
போதைப்பொருளுடன் ஆசிரியர் கைது
பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் சிலாபம் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 90 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த ஆசிரியர் சிலாபம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.