போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 750 பெண்கள் சிறைச்சாலைகளில் உள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுக்திய போதை பொருள் மற்றும் ஒழிப்பு நடவடிக்கை மூலம் கணிசமான அளவில் பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.