பொலிஸாரை சுற்றிவளைத்து தாக்கிய 4 பெண்கள்

கொழும்பு மருதானை பிரதேசத்தில் பொலிஸாரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் ஒருவர், புறக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை விடுவிக்குமாறு கூறியே அவரது 3 சகோதரிகள் பொலிஸாரை தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் நாராஹேன்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது பிரதான சந்தேக நபரான பெண்ணிடம் இருந்து 600 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 200 மில்லிகிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேக நபர் இந்த கலவரத்தின் போது பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.