பொருளாதாரச் சீரழிவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம்

-யாழ் நிருபர்-

பொருட்களின் விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 10.15 மணியளவில் யாழ். பேரூந்து நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தி கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் த.தே.ம.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.