பொன்னுத்துரை உதயரூபன் பிணையில் விடுதலை

கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடம்மாற்ற மேன்முறையீட்டு சபையில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக கைது செய்யப்பட்ட  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர்  பொன்னுத்துரை உதயரூபன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தினால் இன்று புதன்கிழமை அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி இடம்மாற்ற சபையில் ஏற்பட்ட பிரச்சிணைகள் மற்றும் கல்வியோடு தொடர்புடைய ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

இக்கலந்துரையாடலில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பல சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.