பொது இடங்களில் மக்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் , பொது இடங்களில் மக்கள் தங்குவதற்கு தடை விதித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட வர்த்தமானி  அறிவித்தலை விடுத்துள்ளார்.

இந்த வர்த்தமாணி அறிவித்தலின் பிரகாரம் இன்று சனிக்கிழமை 02 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் ஏப்ரல் 04 ஆம் திகதி காலை 6.00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் எந்தவொரு பொது வீதி, புகையிரத நிலையங்கள், பொது பூங்கா, பொது பொழுதுபோக்கு மைதானம் , ஏனைய பொது மைதானம் அல்லது கடற்கரையோரங்களில் எவரும் நடமாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் பொது ஒழுங்கைப் பேணுவது அவசியம் என்று ஜனாதிபதி கருதுகிறார்.