பேருந்து பயண கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பேருந்து பயண கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது பரிசீலிக்க முடியாது என, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தனியார் பேருந்துகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.லங்கா சுப்பர் டீசலின் விலைகள் மேலும் குறையும் பட்சத்தில் இதனைப் பேருந்துகள் பயன்படுத்துவதற்கு முடியும்.

எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்ட போதிலும், தற்போதைய டீசல் விலை அதிகரிப்பு 4% ஐ கடக்கவில்லை.

லங்கா ஓட்டோ டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பேருந்து பயண கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.