பெரிய வெங்காயத்தின் விலை 600 ரூபாய் வரை அதிகரிக்கலாம்!

உள்ளூர் சந்தையில் எதிர்காலத்தில் சில சமயங்களில் பெரிய வெங்காயத்தின் விலை 600 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை சுமார் 70,000 மெட்ரிக் டன்னுக்கு உட்பட அளவில் நாடு அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த அரிசி தொகையை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் மற்றும் சதொசவின் இறக்குமதியாளர்கள் மூலம் இறக்குமதி செய்து சந்தைக்கு விநியோகிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் தற்போது நிலவும் நாடு அரிசிக்கான தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் நாடு அரிசியை 220 ரூபாவுக்கு மேற்படாத விலையில் சந்தையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.