பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் முன்னதாக 110 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
எனினும், நேற்றைய தினம் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 210 ரூபாவாக காணப்பட்டது.