பெண் வைத்தியருக்கு மற்றுமொரு வைத்தியரால் நேர்ந்த கொடுமை

கேகாலையில் பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வைத்தியர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 45 வயதுடைய திருமணமான வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய குறித்த பெண் வைத்தியர் வேறு வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் பெற்று கடந்த 5ஆம் திகதி அரநாயக்க மாவட்ட வைத்தியசாலைக்கு பணிக்காக வந்துள்ளநிலையில் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.