சர்வதேச புவி தினத்தில் 10 ஆயிரம் விளக்குகள்

சர்வதேச புவி தினத்தன்று 10 ஆயிரம் விளக்குகள் ஏற்றும் விசேட நிகழ்வு ஒன்று கிளி நொச்சியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு விடியல் ஆடை தொழிற்சாலையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பசுமை பூங்காவில் இடம்பெற்றது.

புவி மணித்தியாலமான இரவு 8.30 – 9.30 மணி வரை யான காலப்பகுதியில் அனைத்து மின்விளக்குகளும் அணைக் கப்பட்டு புவிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் சர்வமத தலைவர் கள், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர் கள், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது 10ஆயிரம் சிட்டி விளக்குகள் ஏற்றப்பட்டு அப்பகுதி அழகாக காட்சியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது