புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் பொறுப்பேற்றதிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் 12.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 577.5 மில்லியன் டொலர்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வங்கி முறை மூலம் இலங்கைக்கு சட்டப்பூர்வமாக அனுப்பியுள்ளனர்.

2023 ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்தில் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள பணம் 11 வீதத்தால் அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சை முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் வழங்கினார்.

மேலும் அதனைப் பொறுப்பேற்ற மனுஷ நாணயக்கர அப்போதைய நாட்டில் ஏற்பட்டிருந்த எரிபொருள்,எரிவாயு, மற்றும் பால் மாவுக்கான வரிசைகளை அகற்றுவதற்கும், நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் சட்ட அமைப்பின் மூலம் மாதமொன்றுக்கு 500 மில்லியன் டொலர்களை அனுப்புமாறு புலம்பெயர்ந்த தொழிலாளிகளிடம் அவர் கோரிகை விடுத்தார்.

அதற்கு அமைவாக அவர்கள் இதுவரைக்கும் 13.016 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எனவே இவ்வருடத்தில் மாத்திரம் 4.288 பில்லியன் டொலர்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு சட்ட அமைப்பு மூலம் நாட்டுக்கு பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமங்கள், குறைந்த வட்டியில் பல்நோக்குக் கடன் வசதிகள் , வீட்டுக் கடன் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172