புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு தன்னிலை பொருளாதாரத்தை ஊக்குவியுங்கள்

 

தமிழரின் சுயநிர்ணயப் போராட்டத்திற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்து தமது கல்விகளை இழந்து தமது அங்கங்களை கூட இழந்து பொருளாதார ரீதியாக பல சவால்களை எதிர்கொண்டு வருகின்ற முன்னாள் போராளிகளுக்கு தன்னிலை பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்று தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார்

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

முன்னாள் போராளிகள் தமது பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதில் பல சவால்களிலும் முயற்சியாலர்களாகவே இருந்து வருகின்றார்கள்

இவ்வாறான சிறந்த முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் புலம்பெயர் தேசத்தில் இருக்கக்கூடிய தமிழ் உறவுகளும் உதவ வேண்டும்

அத்துடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்வி புலன்களை தவிர்த்து முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.