புதிய நிதியமைச்சராக பந்துல

புதிய நிதியமைச்சராக பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

முன்னதாக நேற்றைய தினம் நிதியமைச்சராக பொறுப்பேற்ற அலி சப்ரி இன்று குறித்த பதவியிலிருந்து விலகியிருந்த நிலையிலேயே தற்போது பந்துல குணவர்தன நிதியமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பந்துல குணவர்தன இதற்கு முன்னதாக வர்த்தக அமைச்சராக செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.