புதிய களனி பாலத்தில் போக்குவரத்து மட்டு

புதிய களனி பாலத்தில் இருந்து துறைமுகத்திற்கு செல்லும் வீதி திருத்த வேலை காரணமாக மூடப்பட்டுள்ளமை தொடர்பில் அதிவேக வீதி சுற்றுலா பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் பெப்ரவரி 12 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை கட்டுநாயக்கவிலிருந்து களனி பாலத்தின் ஊடாக துறைமுகத்தை நோக்கிச் செல்லும் பாதை மாத்திரம் மூடப்படவுள்ளது.

இதேவேளை, ஒருகொடவத்த சந்தியில் இருந்து களனி பாலத்திற்குள் பிரவேசித்து துறைமுக நுழைவாயில் (இங்குருகடே சந்தியை நோக்கிய) பாலத்தின் நடுப்பகுதியை மூட நடவடிக்கை உடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அதிவேக வீதியின் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கும், ஒருகொடவத்தையிலிருந்து கட்டுநாயக்கவிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாது.

இந்த திருத்தப்பணியின் போது, ​​ஒருகொடவத்தை – வெல்லம்பிட்டிய வீதியில் தெமட்டகொட, பேலியகொட, நீர்கொழும்பு வீதி, மீன் சந்தைக்கு அருகில், கண்டி வீதி, தோரண சந்தி ஆகிய இடங்களில் அறிவிப்புப் பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன.